பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை
அட்சயதிருதியையொட்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை நடந்தது.
அட்சயதிருதியையொட்டி தஞ்சை மகர்நோம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், நவநீத கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி நேற்று காலை சாமிக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 கோவில்களிலும் இருந்து அட்சயதிருதியை கருடசேவை புறப்பாடு நடந்தது. இதில் பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் வழியாக திருவீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.