காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2022-10-02 20:16 GMT

சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காந்தி பிறந்த நாள் விழா

சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த காந்தி பிறந்த நாள் விழாவுக்கு மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியம், திருமுருகன், பழனி, பிரபு, விவசாய அணி மாவட்ட தலைவர் சிவகுமார், வக்கீல் பிரிவு தலைவர் ரஞ்சித், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது, ராமன், நாகராஜ், நடராஜ், கோவிந்தன், விஜயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து காமராஜர் நினைவு நாளையொட்டி பட்ட கோவில் அருகே அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

த.மா.கா.

த.மா.கா. மாநகர் மாவட்டம் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் எஸ்.குலோத்துங்கன், மாநில இணை செயலாளர் சின்னதுரை, மாநில துணைத்தலைவி சிந்தாமணியம்மாள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாநகர் மாவட்ட தலைவர் கே.எம்.உலகநம்பி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் மாயம்மா சங்கீதா அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து காமராஜர் நினைவுநாளையொட்டி சேலம் ஆனந்தாபாலம் அருகில் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் விஷ்ணுகுமார், மாரியப்பனார், தயாளன், அய்யாவு தமிழ், செந்தில், துணைத்தலைவர் சக்தி சந்திரன், பொருளாளர் அங்குராஜ், சிறுபான்மை பிரிவு தலைவர் அப்சல்கான், மாணவர் அணி தலைவர் சாலன், தொழிற்சங்க தலைவர் பழனிவேல், மண்டல தலைவர்கள் நல்லு சீனிவாசன், நைனாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க.

இதேபோன்று தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் அவைத்தலைவர் செல்வகுமார், கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் தனசேகர், துணை செயலாளர்கள் சுந்தரம், பேபி, செய்தி தொடர்பாளர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காந்தி காமராஜ் நற்பணி மன்றம்

சேலம் காந்தி காமராஜ் நற்பணி மன்றம் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள், லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள், சிவாஜிகணேசன் பிறந்த நாள் விழா சேலம் ஓரியண்டல் தியேட்டர் அருகில் உள்ள காந்தி சிலை அருகில் நடந்தது. நற்பணி மன்ற தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் அபுதாகிர், துணைத்தலைவர் மான்பாண்டியன், துணை செயலாளர் சுரேந்திரன், ஆலோசகர் சீனிவாசபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகாத்மா காந்தி சிலைக்கு வக்கீல் பொன்முடி மாலை அணிவித்தார். லால்பகதூர் சாஸ்திரி உருவப்படத்துக்கு வசந்தம் சரவணனும், சிவாஜிகணேசன் உருவப்படத்துக்கு ரவியும் மாலை அணிவித்தனர். பொதுமக்களுக்கு காந்தி விரும்பும் உணவுபொருட்களான வேர்க்கடலை, பால் ஆகியவற்றை புஷ்பா மான்பாண்டியன் வழங்கினார். தொடர்ந்து காமராஜரின் நினைவுநாளையொட்டி ஆனந்தா பாலம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு ரகுநாத் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கிருஷ்ணமூர்த்தி, கோடீஸ்வரன், பூபாலன், சிட்டிபாபு, சுதந்திரராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்