தஞ்சையில் நடிகர் சிவாஜிகணேசன் சிலைக்கு மாலை அணிவிப்பு

தஞ்சையில் நடிகர் சிவாஜிகணேசன் சிலைக்கு மாலை அணிவிப்பு

Update: 2022-07-21 19:33 GMT

நடிகர் சிவாஜிகணேசனின் 21-வது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்ட சோழ மண்டல சிவாஜி பாசறை சார்பில் தஞ்சை மணிமண்டபம் அருகில் உள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு மாவட்ட தலைவர் சதா வெங்கட்ராமன் தலைமையில் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் (தெற்கு) வக்கீல் அன்பரசன் மற்றும் தஞ்சை மாவட்ட சோழமண்டல சிவாஜி பாசறை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிவாஜி சிலைக்கு மாலையை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் ஆடிட்டர் செல்வராஜ், மாநகர காங்கிரஸ் கோட்ட தலைவர் கதர் வெங்கடேசன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் களிமேடு ராமலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அப்போது திருச்சி பாலக்கரையில் 12-வது ஆண்டு காலமாக மூடி வைக்கப்பட்டுள்ள சிவாஜியின் திருஉருவசிலையை உடனடியாக திறக்க வேண்டும். மேலும் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி மற்றும் காமராஜ் சிலைகளுக்கு இடையில் சிவாஜியின் சிலையை தமிழக அரசு நிறுவவேண்டும், தஞ்சையில் சிவாஜி சிலை அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைக்கு சிவாஜி சிலை பஸ் நிறுத்தம் என்று பெயரிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்