முத்துக்குமார் உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பு

நெல்லையில் முத்துக்குமார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-01-29 19:10 GMT

நெல்லை மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழின விடுதலைக்களத்தில் தீக்குளித்து உயிர் இழந்த போராளி முத்துக்குமாரின் 14-வது ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க நிகழ்ச்சி பாளையங்கோட்டை மகாராஜநகரில் நேற்று நடந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரின் உருவப்படத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நெல்லை மாநகர இளைஞரணி செயலாளர் சிவந்தி முத்துபாண்டி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் நெல்சன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் அப்துல் ஜப்பார் மற்றும் பரமசிவ பாண்டியன், டிக்முத்து, அய்யப்பன், சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் முத்துக்குமார் உருவப்படத்திற்கு தமிழ்த்தேச தன்னுரிமைக்கட்சி தலைவர் வியனரசு தலைமையில் சுடர் தீபம் ஏற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல் தமிழின போராளி பழனி பாபா நினைவு நாளையொட்டி அவருடைய உருவப்படத்திற்கு முன்பு நின்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா, மாவட்ட செயலாளர் அப்பாக்குட்டி, பொருளாளர் ஜான்சன், மண்டல ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை அருகே உள்ள பண்டாரகுளத்தில் முத்துக்குமார் உருவப்படத்திற்கு சங்கர்நகர் ம.தி.மு.க. செயலாளர் முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்