சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-10-13 10:18 GMT

உடுமலை

உடுமலையை அடுத்துள்ளது கணபதிபாளையம் ஊராட்சி.

உடுமலை-பொள்ளாச்சி சாலையில் இருந்து பிரிந்து கணபதிபாளையத்திற்கு செல்லும் சாலையில், இரவு நேரங்களில் வாகனத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டிசெல்கின்றனர். அதேபோன்று, இந்த சாலையின் குறுக்கே செல்லும் நான்குவழிச்சாலை சந்திப்பு பகுதியில் குப்பைகளை பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு வந்து போட்டுச்சென்றுள்ளனர்.

அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இவ்வாறு குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

-

Tags:    

மேலும் செய்திகள்