குப்பை ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு
கடையம் அருகே குப்பைகள் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன.
கடையம்:
கடையம் அருகே உள்ள மேட்டூரில் இருந்து கடவாகாடு செல்லும் சாலையையும், மேட்டூர்-தோரணமலை சாலையையும் இணைக்கும் சாலையின் மேற்புறம் உள்ள விளைநிலங்களில், தென்காசி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்பட்டு கிடந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் 2 லாரிகளில் குப்பைகளை ஏற்றிக்கொண்டு வந்தனர். அந்த லாரிகளை கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன், ஊராட்சி செயலாளர் ஆனைமணி, தி.மு.க. நிர்வாகி பரமசிவன் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து அங்கு குப்பைகளை கொட்டுவது இல்லை என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.