பாலாற்றில் குவியும் குப்பைகள்

பாலாற்றில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

Update: 2023-04-28 17:24 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை நிலையம் உள்ளது. அதன் அருகே குப்பைகள் தரம் பிரித்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று சேகரிக்கும் குப்பைகளை இங்கு வந்து கொட்டுகின்றனர். அந்த குப்பைகள் இப்போது பாலாற்றில் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் பாலாறு பாழாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, குவிந்து கிடக்கும் குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்