இப்படி இருந்தால் எப்படி குப்பை கொட்டுவதோ?

இப்படி இருந்தால் எப்படி குப்பை கொட்டுவதோ?

Update: 2022-12-05 11:02 GMT

திருப்பூர்,

திருப்பூர் சூசையாபுரம் மேற்கு பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் இங்கு மக்களுக்கு தேவையான அளவில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு இடமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், தற்போது இங்கு வைக்கப்பட்டுள்ள ஒரு குப்பை தொட்டியானது தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குப்பைகளை ரோட்டில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது இங்கு ரோட்டோரத்தில் குப்பை அதிக அளவில் குவிந்து கிடக்கிறது.

இதனால் இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, இப்பகுதியில் உள்ள ரோடு ஏற்கனவே குறுகலாக உள்ளது. அதுமட்டுமின்றி, ரோட்டின் வளைவு பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, இங்கு போதுமான குப்பை தொட்டிகள் வைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்