குப்பைகளை அகற்றிய கலெக்டர்

ஜோலார்பேட்டையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குப்பைகளை அகற்றினார்

Update: 2023-10-01 18:55 GMT

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் தூய்மையே சேவை திட்டத்தை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பை கழிவுகளை அகற்றினார். இதன் தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருப்பதி, துணைத்தலைவர் சஞ்சீவிகுமார், ஊராட்சி செயலாளர் கபிலன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்