ஓய்வூதியம் பெறுகிறவர்களுக்கு ஓய்வூதிய தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்குவதற்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஓய்வூதிய தொகையை வழங்கக்கோரி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மகாத்மா காந்தி சிலையிடம் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் இ.பி.எப். ஓய்வூதியதாரர் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று உடுமலை குட்டைத்திடலில் நடந்தது. அப்போது கோரிக்கை மனு குட்டைத்திடலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலையிடம் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் எல்.ஐ.சி. வேலாயுதம் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். நகராட்சி துணைத்தலைவரான எஸ்.கலைராஜன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.