அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேர் சிக்கினர்

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பஸ்சில் 2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து பதுக்கிய 2பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-08-24 13:02 GMT

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பஸ்சில் 2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து பதுக்கிய 2பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

போலீசார் கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போதை போருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக வடபாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

2 பேர் சிக்கினர்

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானராஜ், சிவராஜ், தனிப்படை போலீசார் மாணிக்கராஜ், சாமுவேல், முத்துப்பாண்டி, திருமணி, செந்தில் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி பொன்னகரம் பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அரசு பஸ்சில் கடத்தல்

அவர்கள் கீழவைப்பாரை சேர்ந்த ராஜ், மதுரை மேலூரை சேர்ந்த சுந்தரபாண்டி என்பதும், அவர்கள் மதுரையில் இருந்து அரசு பஸ்சில் கஞ்சாவை கடத்தி கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்