பஸ்சில் கஞ்சா கடத்தியவர் கைது
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக பஸ்சில் கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ்க்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் தமிழக எல்லை பகுதியில் உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது, 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் கஞ்சா கடத்திய நபர் ஆந்திர மாநிலம், புத்தூர் டி.ஆர்.கண்டிகை பகுதியை சேர்ந்த சேகர் (வயது 44) என்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சேகரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.