கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-15 18:50 GMT

லாலாபேட்டை அருகே உள்ள கருப்பத்தூர் பகுதியில் லாலாபேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேட்டு மகாதானப்புரத்தை சேர்ந்த மதன்குமார் (வயது 21), கருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (24) ஆகியோர் அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து மதன்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 150 கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய நந்தகுமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்