கோத்தகிரி,
கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் நேற்று அரவேனுவுக்கு சென்று கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் சோதனை நடத்தியதில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அரவேனுவை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.