கஞ்சா விற்றவர் கைது
பெரியகுளத்தில் கஞ்சா வி்ற்றவரை போலீசார் கைது செய்தனர்
பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமாட்சி (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.