சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சூரமங்கலம்:
தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ெரயிலில் நேற்று போலீசார் சோதனையிட்டனர். ஜோலார்பேட்டை முதல் சேலம் வரை ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு இல்லா பெட்டியில் பொருட்கள் வைக்கும் இடத்தில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அதனை திறந்து பார்த்ததில் 2 பண்டல்களில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சா கொண்டு வந்தது யார் என்பது தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.