கஞ்சா கடத்திய பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கூடலூரில் கஞ்சா கடத்திய பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தேனி மாவட்டம், கூடலூர் வீரணத்தேவர் சந்து பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி அர்ச்சனா. இவரை கடந்த மாதம் 10 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கூடலூர் வடக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறை காவலில் வைக்கப்பட்டார்.