கஞ்சா வழக்கில் சிறையில் இருந்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா வழக்கில் சிறையில் இருந்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-02-16 18:45 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சித்துடையாரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 48). இவரை கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்காக 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்த வழக்கில் செந்துறை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை பார்ஸ்டல் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே பால்ராஜ் மீது குவாகம் போலீஸ் நிலையத்தில் 2 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பால்ராஜ் தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாலும், அவர் வெளியே வந்தால் மேலும் பல்வேறு சமுதாய கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ரமணசரஸ்வதி பால்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து புதுக்கோட்டை சிறையில் இருந்த பால்ராஜை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு ஆணையின் பிரதிகள் திருச்சி மத்திய சிறை உயர் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்