வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி சுப்பையா புரத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 22). இவரை புதுக்கோட்டை போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் ராஜ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ராஜ்குமாரை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 215 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.