கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் சரகம், தெற்கு பல்லவராயன்பத்தை சேர்ந்த பழனியம்மாள் என்கிற நித்தியா (வயது 35) கொலை தொடா்பாக கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வெண்ணவால்குடி கொத்தகோட்டையான் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பாண்டியராஜனை (19) கைது செய்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமுவுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். இதையடுத்து பாண்டியராஜன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அதற்கான நகலில் அவரிடம் போலீசார் கையெழுத்து பெற்றனர். மேலும் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.