கொள்ளை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொள்ளை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள ஐ.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் தேவேந்திரன். தொழிலதிபர். இவரது வீட்டில் கடந்த ஜனவரி மாதம் திருவையாறு பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற செல்வா கார்த்தி என்பவர் ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றார். இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி செல்வா கார்த்தியை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் செல்வா கார்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள திருச்சி மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் செல்வா கார்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.