2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் தெற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் பொன்மாடசாமி (வயது 31) என்பவரை, தம்பியை கொலை செய்த வழக்கில் எப்போதும் வென்றான் போலீசார் கைது செய்தனர். இதேபோன்று திருச்செந்தூர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் பாரத் (20) என்பவரை தங்கசங்கிலி பறிப்பு வழக்கில் தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பொன்மாடசாமி, பாரத் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.