2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தென்காசி மாவட்டத்தில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வாசுதேவநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் தொடர்புடைய கோபிநாத் (வயது 23) மற்றும் சேர்ந்தமரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய செல்வக்குமார் (24) ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.