2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-12-19 18:02 GMT

ராணிப்பேட்டையை அடுத்த வானாபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). இவர் சிப்காட் போலீசாரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், கீழ் விஷாரம் ராசாத்துபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (29). இவர் வாலாஜா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரையும் கண்டர் தடுப்புசட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸகர பாண்டியன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்