2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள நந்தன் தட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கி மகன் மணிகண்டன் (வயது 35). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் முக்கூடல் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் நெல்லை பேட்டை அருகே உள்ள மயிலப்பபுரத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் முருகன் (22). இவரும் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் தாழையூத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி முருகன், மணிகண்டன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்கள்.