2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை மாவட்டத்தில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-10-20 19:32 GMT

நெல்லை மாவட்டம் மானூர் தெற்குப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (வயது 34). இவரை மானூர் போலீசார் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடக்கு தோழப்பன் பண்ணையை சேர்ந்தவர் அய்யாகுட்டி (24). இவரை கங்கைகொண்டான் போலீசார் கொலை முயற்சி, திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று, 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்படி தாமரைக்கண்ணன் மற்றும் அய்யாகுட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்