2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-07-29 17:49 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து மேலக்காட்டை சேர்ந்தவர் சரபோஜிராஜன் (வயது52),வெளிப்பாளையத்தை சேர்ந்த இளமாறன் (46), மற்றும் 2 பேர் இலங்கைக்கு கடத்தி செல்ல கார்களில் கஞ்சா கடத்தி வந்தனர். அப்போது நெய்விளக்கு பகுதியில் 47 கிலோ கஞ்சாவுடன் அவர்களை வேதாரண்யம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நாகை சிறையில் அடைத்தனர். சரபோஜிராஜன், இளமாறன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில கைது செய்யக்கோரி கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சரபோஜிராஜன், இளமாறன் ஆகியோரை வேதாரண்யம் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்