2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சியை அடுத்த எஸ்.புதுப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வடமதுரை போலீசாரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் கூவனூத்து அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் (26). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் ஒருவரை கொலை செய்த வழக்கில் மகேந்திரனை மேற்கு போலீசார் கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து கலெக்டர் பூங்கொடி உத்தரவின்பேரில் மாவட்ட சிறையில் இருந்த பழனிசாமி, மகேந்திரன் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சைிறயில் அடைத்தனர்.