ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் காளீஸ்வரன் (வயது 24). இவரை கடந்த மார்ச் 26-ந் தேதி முன்விரோதம் காரணமாக அழகன்குளம் பகுதியை சேர்ந்த பல்லு பாலா (33) என்பவர் தனது நண்பர்களுடன் சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக தேவிபட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து பல்லுபாலாவை கைது செய்தனர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 6 வழக்கு கள் உள்ளது. இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பரிந்துரை செய்தார். அதனை ஏற்று மேற்கண்ட பல்லு பாலாவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல்லு பாலா மதுரை சிறையில் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்.