ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மணல்மேடு அருகே ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2023-08-05 18:45 GMT

மணல்மேடு:

மணல்மேடு அருகே ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ரவுடி

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே திருச்சிற்றம்பலம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 47). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவரது பெயர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது. கடந்த மாதம் ஒரு வழக்கு தொடர்பாக கமலக்கண்ணளை மணல்மேடு போலீசார் கைது செய்து மயிலாடுதுறை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

குண்டர் சட்டத்தில் கைது

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா, கமலக்கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்துகமலக்கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.

அதன் பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கமலக்கண்ணனை கைது செய்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்