போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மானூரில் போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-07-28 19:28 GMT

மானூர் தாலுகா மேல இலந்தகுளம் உலகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 46). இவரை நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று ஆபிரகாமை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் ஆபிரகாமை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை ஊரக அனைத்து மகளிர் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்