கங்கையம்மன் சிரசு திருவிழா

துத்திக்காடு கிராமத்தில் கங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.

Update: 2023-05-31 12:13 GMT

கணியம்பாடி அருகே உள்ள சோழவரம் துத்திக்காடு கிராமத்தில் கங்கையம்மன் திருவிழாவை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பிற்பகலில் கூழ்வார்க்கும் திருவிழாவும், இரவில் கங்கையம்மன் சிரசு ஊர்வலமும் நடைபெற்றது. 

இதனையடுத்து கோவிலில் அம்மன் உடலில் சிரசு பொருத்தி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கொக்கலிக்கட்டை, புலிவேஷம் ஆட்டம் ஆடினர். இரவில் நாடகம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் இளைஞர்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்