கங்காதர ஈஸ்வரர் கோவில் தேரோட்டம்

ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-04-01 16:33 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனை, உற்சவர் வீதிஉலா நடைபெற்று வருகிறது.

விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள், பொதுமக்கள் வடம் பிடித்து இழுந்தனர். கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய தேரோட்டம் ஆரணி சாலை, தொல்காப்பியர் தெரு, ஜீவானந்தம் சாலை, அண்ணாசிலை, புதியவேலூர் ரோடு பஸ் நிலையம், அண்ணாசாலை வழியாக சென்று நிலையை அடைந்தது.

விழாவில் கோவில் திருப்பணிக்குழு தலைவர் கு.சரவணன் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம் நடைபெற்ற அனைத்து சாலைகளிலும் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்