நாகை மாவட்டம் வாய்மேடு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு நேற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சேனாதிக்காட்டில் இருந்து சிலை ஊர்வலமாக வாய்மேடு கடைத்தெரு, லட்சுமி ஆற்றாங்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது பக்தர்கள் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர். பின்னர் வாய்மேடு போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள ஆவடைதாமரை குளத்தில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.