விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலம்

திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்கு 600 போலீசார் ஈடுபட உள்ளனர்.

Update: 2022-09-01 17:20 GMT

திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்கு 600 போலீசார் ஈடுபட உள்ளனர்.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் சார்பில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரை குளத்தில் கரைக்கப்பட உள்ளது.

விநாயகர் சிலைகள் ஊர்வலம் திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள காந்தி சிலை அருகில் தொடங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தாமரை குளத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

600 போலீசார்

முன்னதாக இந்து முன்னணி சார்பில் காந்தி சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது

.இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், திருவண்ணாமலையில் இன்று நடைபெற உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் திருவண்ணாமலை சுற்று பகுதியில் இருந்து சுமார் 80 சிலைகள் பங்கேற்க உள்ளன.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றார்.

முன்னேற்பாடு பணிகள்

முன்னதாக தாமரை குளத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் முருகேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்