விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ஆற்காட்டில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் சுமார் 20 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. இந்த சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஆற்காடு தாலுகா அலுவலகம் அருகே இருந்து தொடங்கியது. ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில், தொழிலதிபர் ஏ.வி.சாரதி, வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஊர்வலம் ஆற்காடு நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று தாஜ்புரா பகுதியில் உள்ள கிணற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.