விநாயகர் சிலைகள் ஊர்வலம்

சிவகாசி, ராஜபாளையத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-09-21 19:36 GMT

சிவகாசி, 

சிவகாசி, ராஜபாளையத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

சிவகாசி

சிவகாசியி்ல் 42 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில் விநாயகர் சிலைகள் நேற்று மாலை சிவகாசி மாரியம்மன் கோவில் அருகில் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக 30 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தெய்வாணை நகரில் உள்ள ராட்சத தொட்டியில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் நகர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இந்தநிலையில் நேற்று 27-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஊர்வலம் பழைய பஸ் நிலையம், காந்தி சிலை ரவுண்டானா வழியாக சென்றன. இதில் இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர்கள் சஞ்சீவி, சூரி, நகர தலைவர் சித்திரபுத்திரன், நகர பொதுச் செயலாளர்கள் சந்திரன், மகாதேவன், ஒன்றிய தலைவர் சரவணகுமார் உள்பட இந்து முன்னணி நிர்வாகிகளும், ஆர். எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜனதா கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பீர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் முகேஷ் ஜெயக்குமார், சாத்தூர் வினோஜி, விருதுநகர் கண்ணன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் கருங்குளத்தில் கரைக்கப்பட்டது. காந்தி சிலை அருகே ஊர்வலம் வரும் போது இந்து முன்னணி கொடிகளை போலீசார் அகற்ற முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 

Tags:    

மேலும் செய்திகள்