விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

சோளிங்கரில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-28 11:37 GMT

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். சோளிங்கரில் 36 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதனை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் விநாயகர் சிலைகள் 10 அடி உயரத்திற்குள் இருக்க வேண்டும், வருவாய் கோட்டாட்சி தலைவர் மற்றும் தீயணைப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலை வைக்கப்படும் இடங்களில் தீயணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும், அதிக சத்தத்தம் எழுப்பக்கூடிய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது, பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் விழா குழுவினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விழாவிற்காக வைக்கப்படும் பேனர்களில் கட்சித் தலைவர்களின் படங்கள் இடம் பெறக்கூடாது, விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் சென்று குறிப்பிடப்படும் நீர் நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், விழாக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்