விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
நாசரேத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாசரேத்:
நாசரேத்தில் இந்து முன்னணி நடத்தும் 11-ம் ஆண்டு விநாயகர் சதூர்த்தி விழா மற்றும் விஜர்சன ஊர்வலம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நாசரேத் போலீஸ் நிலையத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சத்திவேலன், தூத்தூக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் அருணாச்சலம், பாரதீய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன், ஒன்றிய பொறுப்பாளர் பரமசிவன், ஆழ்வை மத்திய ஒன்றிய தலைவர் முருகன், ஓடைமுருகேசன், ஒன்றிய பொதுச்செயலாளர் திருமுருகன், ஒன்றிய துணைத்தலைவர் அங்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.