யானைகள் மறுவாழ்வு மையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

யானைகள் மறுவாழ்வு மையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

Update: 2023-09-18 21:30 GMT

திருச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட எம்.ஆர்.பாளையம் காப்பு காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு, உரிய பராமரிப்பு இல்லாத கோவில் யானைகளும், சட்ட விரோதமாக வைத்திருந்த தனியார் யானைகளும் கோர்ட்டு உத்தரவின் பேரில், கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் யானைகள் மறுவாழ்வு மையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது யானைகளுக்கு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, கரும்பு மற்றும் தர்பூசணி, அன்னாசி, முலாம்பழம் உள்ளிட்ட பழ வகைகள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் கிரண் ஆகியோரின் அறிவுரைப்படி உதவி வன பாதுகாவலர்கள் சம்பத் குமார், சரவணகுமார் தலைமையில் வனச்சரக அலுவலர்கள் சுப்பிரமணியம், கிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்