கோவில்பட்டியில்காந்தி ஜெயந்தி விழா

கோவில்பட்டியில் நடந்த காந்தி ஜெயந்தி விழா வில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம.எல்.ஏ. கலந்து கொண்டார்.

Update: 2022-10-03 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் இந்திய கலாசார நட்புறவு கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா, காமராஜர் நினைவு நாள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட 5-வது மாநாடு நடந்தது. மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காந்தி, காமராஜர் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவிகளுக்கான கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட பொதுச்செயலாளர் தமிழரசன், திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி, செயலாளர் சீனிவாசன், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன், மாநில குழு உறுப்பினர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், யூனியன் துணைத் தலைவர் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி குமரெட்டியாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு பூமி பூஜையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெயிலுகந்தபுரத்தில் ரூ.13 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். பின்னர் அழகப்பபுரத்தில் ரூ.11 லட்சத்தில் புதிய கலையரங்கம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தாமோதரன், நகரசபை கவுன்சிலர் கவியரசன், நிர்வாகிகள் பழனிக்குமார், அழகர்சாமி, கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்