சேலம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

சேலம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது.

Update: 2022-10-25 20:32 GMT

சேலம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது.

கந்தசஷ்டி விழா

சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் நேற்று கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது.

சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவிலில் சஷ்டி சூரசம்கார உற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. வருகிற 30-ந் தேதி மாலை 4 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

காவடி பழனியாண்டவர்

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் நேற்று கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. கோவில் முன்பு ஏற்றப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மூலவர் பழனியாண்டவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கந்தசஷ்டி விழாவையொட்டி வருகிற 30-ந் தேதி காலை 7 மணிக்கு சஷ்டிபாராயணம் நடக்கிறது. சக்திவேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 36 தடவை சஷ்டி பாராயணம், 108 வலம்புரி சங்காபிஷேகம், மதியம் 12 மணிக்கு தங்க கவசம் சாத்துபடி நிகழ்ச்சி நடக்கிறது.

மாவட்டம் முழுவதும்...

தொடர்ந்து மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மகா அபிஷேகமும், செந்தூர்வேலன் அலங்காரமும், 108 தங்க மலர்களால் அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் சேலம் மாவட்டம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. முதல் நாள் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்