ஸ்ரீஜல கமல கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

ஏரியூர் அருகே காமராஜாபேட்டையில் ஸ்ரீஜல கமல கணபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-09-12 16:23 GMT

ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள காமராஜாபேட்டையில் பழமையான ஸ்ரீஜல கமல கணபதி கோவில் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம், யாகசாலை பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலையில் இருந்து புனிதநீர் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் ஓதி, சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்