கணபதிசமுத்திரம் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் மீலாது விழா
கணபதிசமுத்திரம் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் மீலாது விழா நடந்தது.
ஏரல்:
ஏரல் அருகே உள்ள கணபதிசமுத்திரம் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் நபியின் உதய தின விழா ஏரல் சுற்றுவட்டார ஆலிம்கள் மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஏரல் ஜமாத் தலைவர் பாக்கர்அலி தலைமை தாங்கினார். செயலாளர் முகமது உசேன், துணைத்தலைவர் நக்கிப் ஹாஜியார், சூழ வாய்க்கால் தலைவர் இக்பால் மற்றும் சிந்தா சிராஜுதீன், அப்துல்பாரி, தாஜ்தீன், ரகுமான், அஸ்லாம், வசீர், அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி இமாம் சாகுல் ஹமீது இறை வசனம் ஓதி தொடங்கி வைத்தார். சிறுத்தொண்டநல்லூர் இமாம் நாகூர் மீரான் சிறப்புரை ஆற்றினார்.ஏரல் பெரியமனார் தெரு இமாம் சதக்கதுல்லாஹ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சேதுக்குவாய்தான் பக்ருதீன்அலி, அகமது, சூழவாய்க்கால் செய்யது சுலைமான், ஏரல் மதரஸா ஆசிரியர் சாகுல் ஹமீது, வடக்கு பள்ளி முகமது இர்ஷாத் மற்றும் மாணவர்கள், ஜமாத்தார்கள், பெண்கள் உட்பட முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.