மேலூர்,
மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியில் மேலவளவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் அதே ஊரை சேர்ந்த கோயிலன் (வயது 47), செந்தில்குமார் (43), அழகாபுரியை சேர்ந்த ராசு (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,460 பறிமுதல் செய்யப்பட்டது.