காரியாபட்டியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-08 22:38 GMT

காரியாபட்டி, -

காரியாபட்டி சுகாதார பணியாளர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சேகர் (வயது 47). ெதாழிலாளியான இவருக்கு உணவு குழாயில் எரிச்சல் இருப்பதாக கூறி காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இவருக்கு வயிற்றுவலி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி கலாவதி வேலைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் சேகர் தனது வீட்டின் மாடிக்கு சென்றவர் வெகு நேரமாக கீழே வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மாடிக்கு சென்று பார்த்த போது சேகர் மாடியில் தூக்கில் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்