பியூச்சர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பியூச்சர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆம்பூரை அடுத்த சோலூர் பகுதியில் இயங்கி வரும் பியூச்சர் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளியின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். எம்.மோஹித் ஜெயின் முதலிடமும், எம்.மனிஷா குர்ஜர் இரண்டாம் இடமும், பி.ஏ.பவிஷ்கா மூன்றாம் இடமும் பிடித்தனர். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கே.முகமது பாராஸ் அஸ்ஜத் முதலிடமும், எஸ்.சபிதா இரண்டாம் இடமும், டி.தர்ஷினி மூன்றாம் இடமும் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளியின் நிர்வாகி, பள்ளியின் முதல்வர் குமாரி, துணை முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசும் மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பள்ளியிலேயே 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்க பள்ளிக் கட்டணச் சலுகை வழங்கப்பட இருப்பதாக பள்ளியின் நிர்வாகி தெரிவித்தார்.