மாட்டு வண்டி போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் கோட்டைக்கருப்பசாமி மற்றும் படைச்சி அம்மன் கோவில் ஆவணி கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. பெரிய மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 53 ஜோடி மாடுகள் பங்கேற்றன. போட்டி மேல்மாந்தை முதல் கலைஞானபுரம் வரை நடைபெற்றது.
முதலில் பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியும், 2-வதாக பெரிய மாட்டு வண்டி போட்டியும் நடைபெற்றது. சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டி போட்டியை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று ஆர்வமுடன் பார்த்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள், சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.