போலீஸ் ஏட்டுவின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க இறுதிச்சடங்கு
போலீஸ் ஏட்டுவின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க இறுதிச்சடங்கு நடைபெற்றது.
துறையூர், ஜூன்.5-
ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் தங்கவேல் (வயது 59). மருத்துவ விடுப்பில் இருந்த இவர் விபத்தில் சிக்கி பலியானார். இந்தநிலையில் அவரது உடல் நேற்று துறையூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இந்நிலையில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி அரசு உதவித் தொகை ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை ஏட்டுவின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.