ஆவின் பாலகம் அமைக்க‌ மானியத்துடன் நிதியுதவி

ஆவின் பாலகம் அமைக்க‌ மானியத்துடன் நிதியுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-17 13:15 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட ஒரு நபருக்கு திட்ட தொகை ரூ.3 லட்சத்தில் மானியம் ரூ.90 ஆயிரம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது. கூடுதல் செலவினத்தை ஈடுசெய்யவும் மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்றடைய, ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகப்பட்சமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகப்பட்சமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மானியமும் வழங்கப்படும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்